மண்டபம் ஃபுல்லா ‘சீர்வரிசை’.. என்னது இவ்ளோ ரூபாயா..! மிரண்டுபோன சொந்தக்காரர்கள்.. மதுரையை திரும்பி பார்க்க வைத்த கல்யாணம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மகளின் திருமணத்துக்கு சுமார் 2 கோடி மதிப்பில் சீர்வரிசை கொடுத்த சம்பவம் வியக்க வைத்துள்ளது.

கடந்த இரு தினங்களாக கல்யாண சீர்வரிசை பொருட்கள் கொடுப்பட்ட வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. ஆடு முதல் கார் வரை, தங்கத்தட்டுகள் முதல் சில்வர் தட்டுகள் வரை சீர்வரிசையாக வழங்கப்பட்டதாக பேஸ்புக்கில் ஏராளமான புகைப்படங்கள் வெளியாகி வந்தன. யார் வீட்டு திருமணத்தில் இவ்வளவு சீர்வரிசை செய்யப்பட்டது என பலரும் தேடி வந்தனர். தற்போது இந்த திருமணம் எங்கு நடந்தது என தெரியவந்துள்ளது.
மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்தியின் திருமணத்துக்குதான் இந்த சீர்வரிசை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்திக்கும், கொடிமங்கலம் வி.பி வைத்தியநாதன் என்பவரின் மகன் வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த 4ம் தேதி நாகமலைபுதுக்கோட்டையில் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்துக்கு ஆடுகள், கார்கள், மோட்டார் சைக்கிள், டிராக்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் அனைத்து வகையான பொருட்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. மண்டபத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்த சீர்வரிசைப் பொருட்களை பார்த்த திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் வியந்தே போயுள்ளனர்.

மற்ற செய்திகள்
