‘90 சதவீதம் பயனளிக்கும்’... ‘கொரோனா தடுப்பு மருந்தை’... ‘முதல் கட்டமாக இந்த 4 இடங்களுக்கு’... ‘வழங்க பைசர் நிறுவனம் முடிவு’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்பைசர் நிறுவனம், தனது தடுப்பூசியை அமெரிக்காவின் 4 மாகாணங்களில், முன்மாதிரியாக வழங்க திட்டமிட்டுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக இன்றளவும் அமெரிக்கா உள்ளது. தடுப்பூசி வருவது எப்போது என்பதுதான் அங்கு மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.
இதனால் கொரோனா தடுப்பு மருந்துகளை தருவதில், அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் கொரோனா அதிகம் தாக்கப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள, அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மாகாணங்களுக்கு தடுப்பு மருந்துகள் முதலில் வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசு கருதுகிறது.
இதனை அடுத்து தற்போது பைசர் நிறுவனம், ரோடு ஐலண்ட், டெக்சாஸ், நியூ மெக்ஸிகோ, டென்னிஸி ஆகிய மாகாணங்களுக்கு முதற்கட்டமாக தடுப்பு மருந்துகளை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதையொட்டி பைசர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘தொடர்புடைய அமெரிக்க அமைப்புகளுடன் எங்கள் ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்.
இது, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்கான திட்டமிடல், வரிசைப்படுத்துதல், நிர்வாகம் ஆகியவற்றுக்கு உதவும்’ என கூறி உள்ளது. இந்த 4 மாகாணங்கள் மூலம் கிடைக்கிற அனுபவத்தை கொண்டு, அமெரிக்கா முழுவதும் இந்த கற்றல் திட்டம் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் எனவும் கூறி இருக்கிறது.
அமெரிக்காவின் பைசர் தடுப்பு மருந்து நிறுவனம் தற்போது 90 சதவீதம் பலனளிக்கும் சக்திவாய்ந்த கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதனை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதற்கு, தற்போது இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள முக்கியமான இடங்களில் இந்த தடுப்பு மருந்துகள் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது என முன்னதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தத் தடுப்பு மருந்து குப்பிகள் -70 டிகிரி குளிர் நிலையில் உள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால், அதிக வெப்பம் ஆசிய நாடுகளில் பாதுகாக்க் முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.