‘அப்போ நம்பி சாப்டதெல்லாம்’... ‘முந்திரி, பாம் ஆயில் கலந்து நல்லெண்ணெய்!’.. ‘ரைஸ் பிரான் கலந்து கடலை எண்ணெய்!’.. 'தமிழகத்தில்' .. 250 நிறுவனங்களுக்கு பறந்தது நோட்டீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் மதுரையில் இருக்கும் சிறு மற்றும் பெரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் எண்ணெய் மதுரையில் இருந்து சில்லரை விற்பனையாக செய்யப்படும் நிலையில் கடந்த ஆண்டு தீபாவளியின் போது மதுரை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்தந்த நிறுவனங்களையே அவற்றை சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இதில் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 350 எண்ணெய் நிறுவனங்களில் மீண்டும் மாதிரிகள் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 250 நிறுவனங்களுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 50 நிறுவனங்களின் எண்ணெய்கள் உண்ண தகுதியற்ற உணவு பொருளாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னும் 100 நிறுவன எண்ணெய்களின் ஆய்வு முடிவு வெளியாகாத நிலையில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ள 250 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கலப்பட குற்றச்சாட்டினை மறுக்கும் நிறுவனங்கள் தாங்கள் கூறும் ஆய்வகத்தில் சோதனை செய்ய விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணெய்களில், முந்திரி எண்ணெய் மற்றும் பாம் ஆயில் கலந்து நல்லெண்ணெயும், ரைஸ் பிரான் ஆயில் கலந்து கடலை எண்ணெயும் தயாரிப்பது, மட்டுமல்லாது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கான நறுமணத்துக்காக ரசாயனங்கள் கலக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனிடையே உதிரி எண்ணெய் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ள நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் பொருள்களை வாங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மற்ற செய்திகள்
