சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’.. இனி புறநகர் ரயிலில் யாரெல்லாம் போகலாம்?.. வெளியான ‘புதிய’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் புறநகர் ரயில்களில் பயணம் செய்வது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், கடந்த மார்ச் முதல் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும் புறநகர் மின்சார ரயில் சேவை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் மத்திய-மாநில அரசு ஊழியர்கள் புறநகர் மின்சார ரயிலில் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவன ஊழியர்களையும், மின்சார ரயிலில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில்,
1. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்.
2. அரசு மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய பொருட்களை கையாளும் மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.
3. அனைத்து கல்வி நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள்.
4. தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள்.
5. சரக்கு மற்றும் பயணிகளுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள்.
6. குழந்தை நலம், மூத்த குடிமக்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளில் ஈடுபடும் சமூக சேவை செய்யும் அமைப்புகள்.
7. அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்.
8. பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்கும் வக்கீல்கள் ஆகியோர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பணி மற்றும் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான அங்கீகார கடிதத்தையும், அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையையும் பயணத்தின்போது காட்டவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மற்ற செய்திகள்
