'நீ தான் தைரியமான ஆளாச்சே... ஓடு.. ஓடித்தான் பாரு!'... 1200 கி.மீ கார் சேசிங்... ஐ.பி.எஸ் உடையில் மோசடி மன்னன்!.. காவல்துறையின் மாஸ் ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Oct 09, 2020 08:19 PM

ஐபிஎஸ் அதிகாரி போல் நடித்து பலரை ஏமாற்றிய ராஜஸ்தானை சேர்ந்த நபரை மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

mumbai crime branch arrests fake ips officer gujarat bangalore

ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து சூரத் தொழிலதிபரை புகழ்பெற்ற மரைன் டிரைவ் ஹோட்டலில் இருந்து கடத்தி, 16 இலட்சம் வசூலித்த ராஜஸ்தான் மோசடி பேர்வழியை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத்திலிருந்து பெங்களூரு வரை 1200 கிலோமீட்டர் தூரம் சாலைவழியாகவே காரில் துரத்தி இவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியாக காட்டிக்கொண்டு பெரிய தொழிலதிபர்களிடமிருந்து பணம் பறிக்கும் இந்த நபர், ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்திலுள்ள பியாவரில் வசிக்கும் 38 வயதான சிவசங்கர் சர்மா என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

ஆடை ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சூரத்தை சேர்ந்த முகமது எத்தேஷம் அஸ்லம் நவிவாலாவின் புகாரின் பேரில் சர்மா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பாக சர்மா நவிவாலாவுக்கு போன் செய்து ஐபிஎஸ் அதிகாரி போல பேசியுள்ளார் சிவசங்கர் சர்மா. நவிவாலா சுங்க ஏற்றுமதி விதிமீறல்கள் செய்திருப்பதாகவும், அதற்காக பேச்சுவார்த்தை நடத்த மரைன் டிரைவ் ஹோட்டலுக்கு வரவழைத்த சர்மா அவரை கடத்தி மிரட்டி ரூ.16 இலட்சம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 24 மணி நேரம் காரில் தொடர்ந்து துரத்தி சர்மாவை மும்பை போலீஸ் கைது செய்தது.

சர்மா ஏற்கனவே மத்திய பிரதேச உணவக உரிமையாளரிடம் பல இலட்சம் ஏமாற்றியதற்காகவும், குஜராத் காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் போலீஸ் அதிகாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பெரிய தொகையை மோசடி செய்ததாகவும் புகார்கள் உள்ளன.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mumbai crime branch arrests fake ips officer gujarat bangalore | India News.