‘இளைஞர்கள், இளம் பெண்கள் என விடிய விடிய நடனம்!’.. ‘சென்னையில் ஹூக்கா போதைக் கலாசாரம்!’.. அதிரடி ரெய்டில் சிக்கிய 14 பார்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையின் ஹூக்கா பார்களில் இளம்பெண்கள், இளைஞர்கள் விடிய விடிய போதையில் சினிமா பாடல்களுக்கு நடனமாடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக பார்களை நடத்திய 14 பேரை கைதுசெய்யப்பட்டனர்.
வெளிநாடுகளில் மட்டுமே பிரபலமான ஹூக்கா பார்கள், சென்னையிலும் சில ஆண்டுகளாகச் செயல்படுகின்றன. மேஜைமீது வைக்கப்பட்டிருக்கும் உயரமான கண்ணாடிக் குவளைக்குள் இருக்கும் போதை பொருள்களை, நீளமான குழாய்கள் மூலம் உறிஞ்சும் முறையில் இந்த பார்கள் உணவகங்கள் என்கிற பெயரில் செயல்படுகின்றன.
இது குறித்து தகவல் கிடைத்ததும், கூடுதல் கமிஷனர் தினகரன் உத்தரவின்பேரில் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி பகுதிகளில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் எட்டு ஹூக்கா பார்களில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பேர் கைது செய்யப்பட்டதுடன் பார்களும் மூடப்பட்டன.
கல்லூரி மாணவ, மாணவிகள், இளம்பெண்கள், இளைஞர்கள் இந்த பார்களில் போதையில் மகிழ்ச்சியாக விடிய விடிய சினிமா பாடல்களுக்கு நடனமாடியது தெரியவந்துள்ளது. இதற்கு 2,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோடு பகுதி, ஆயிரம் விளக்கு வேல்ஸ் கார்டன் பகுதிகளிலும் செயல்பட்டு வந்த ஹூக்கா பார்களை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு அந்த பார்கள் ஏற்கனவே மூடப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.