'பள்ளிக்கூடம் போற பசங்க இருக்காங்க' ... அதுனால தான் ... போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செய்த காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சாவூர் அருகே ஏரியில் மண் அள்ள வந்தவர்களை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் அருகேயுள்ள கொல்லாங்கரை என்ற கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட அன்னுவத்தி ஏரி உள்ளது. இங்கு மண் அள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் அந்த கிராம மக்கள், ஏரியில் மண் அள்ள அனுமதிக்க கூடாது என்ற கலெக்டரிடம் மனு அளித்த பின் மண் அள்ள அனுமதிக்கமாட்டோம் என்ற அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து இன்று பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரியுடன் சிலர் மண் அள்ள வேண்டி அன்னுவத்தி ஏரிக்கு வந்தனர். இதையறிந்த கிராம மக்கள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது `அரசாங்கத்தின் அனுமதி பெற்றுதான், மண் அள்ள வந்தோம்' என்ற எந்திரத்தோடு வந்தவர்கள் தெரிவித்தனர். எனினும் கிராம மக்கள் மண் அள்ள அனுமதிக்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பேருந்தில் தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவர்கள் இருந்ததால் பேருந்துக்கு வழி விட்டு பின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். சாலை மறியல் நடைபெறுவதை அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் மண் அள்ள அனுமதிக்க மாட்டோம் என்ற வாக்களித்ததன் பெயரில் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர்.
