'கொரோனாவால் தள்ளிப்போன தேர்வு'... குரூப் 1 தேர்வுக்கான தேதியை அறிவித்த டிஎன்பிஸ்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கான தேதியைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடத்தத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகி வந்த பலரும் எப்போது தேர்வு தேதி அறிவிக்கப்படும் என ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் காலிப் பணியிடங்களுக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
