'குரூப் 2ஏ' தேர்விலும் முறைகேடு.... "அட போங்கப்பா..." 'டி.என்.பி.எஸ்.சி' மேல இருந்த 'நம்பிக்கையே' போச்சு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்'குரூப் - 4' தேர்வு முறைகேடு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய 'குரூப் - 4' தேர்வு முறைகேடு தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2017 ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது பிரச்னைக்கு காரணமான அதே கீழக்கரை, ராமேஸ்வரம் மையங்களில் தேர்வெழுதிய 37 பேர் தேர்வு பட்டியலில் இருந்துள்ளனர். முறைகேடு தெரியவந்தாலும் அனைவரும் தற்போது அரசு பணிகளில் உள்ளனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி.என்.பி.எஸ்.சி., அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
Tags : #TNPSC #SCANDAL #GROUP 2A #2017 GROUP 2A #TNPSC RECOMMENDS
