'வழக்கம்' போல் 'காலையில்' நடமாடிய மக்கள்!.. 'புளியமர' கிளையில் கண்ட 'அதிர்ச்சி' காட்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளங்குடிப்பட்டி ஐயனார் கோயில் முன்பு புளிய மரம் ஒன்றில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அவ்வழியாக சென்றவர்கள் அந்த சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது பிறந்து மூன்று நாள் ஆன, பெண் குழந்தை ஒன்று ஜவுளிக்கடை கட்டைப்பையில் வைத்து புளிய மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைக் கண்டதும் உறைந்துபோனவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் அவர்கள் விரைந்து வந்து குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மேலும் குழந்தையின் உடல் நலம் குறித்தும் சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் குழந்தைகள் நல அமைப்பினர் கவனித்து வருகின்றனர். அத்துடன் இது குறித்து நமணசமுதிரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிறந்து மூன்று நாள் ஆன நிலையில் பெண் குழந்தை ஒன்று துணிக்கடை கட்டைப்பையில் வைத்து புளிய மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள இந்த சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
