‘வாட்டர் ஹீட்டர்’ சுவிட்சை ஆப் பண்ண மறந்த அப்பா.. விளையாட்டாக தொட்ட ‘பிஞ்சு’ குழந்தை.. சென்னையில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வாட்டர் ஹீட்டரை தொட்ட 4 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் யாஷினி (4). குளிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வாட்டர் ஹீட்டரை ஏழுமலை போட்டுள்ளார். தண்ணீர் சூடான பிறகு சுவிட்சை அணைக்காமல் வாட்டர் ஹீட்டரை அப்படியே தரையில் வைத்துவிட்டு, குளிப்பதற்காக சுடுதண்ணீரை எடுத்து சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை யாழினி எதிர்பாராதவிதமாக தரையில் கிடந்த வாட்டர் ஹீட்டரை தொட்டுள்ளது. இதனால் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து துடிதுடிக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. கவனக்குறைவால் சுவிட்ச் ஆப் செய்யாமல் வாட்டர் ஹீட்டரை தரையில் போட்டதால் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
