“ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு உயிர்தானம் கொடுத்த நபர்!”.. ‘ஆசையாய்’ குழந்தையை காணச் சென்றபோது காத்திருந்த ‘அதிர்ச்சி’!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் இரண்டு பெண்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நபர் உயிரணு தானம் வழங்கியுள்ளார்.

பின்னர் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை அப்பெண்களுள் ஒருவருக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழந்தையை ஆசையாக சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக் கொண்ட அந்தப் பெண்கள் இருவரும் பிரிந்துவிட, அவர்களில் ஒரு பெண் மட்டும் அந்தக் குழந்தையை வளர்த்து வந்துள்ளார்.
எனினும் உயிரணு தானம் கொடுத்த அந்த நபர் குழந்தையை சென்று பார்ப்பதற்கு குழந்தையை தற்போது வளர்ந்து வரும் பெண் மறுத்துள்ளார். இந்த விஷயம் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தவே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தைக்கு ஆறு வயதாகும் நிலையில் குழந்தையுடன் நேரம் செலவிட உயிரணு தானம் செய்தவருக்கு அனுமதி இல்லை என்று நிராகரித்து விட்டார்.
காரணம் குழந்தையை சந்திக்க அவருக்கு அனுமதி அளித்தால் குழந்தையின் வாழ்வில் அவர் அதிக இடம் தேட விரும்புவார் என்றும் அது குழந்தையின் நலனை பாதிக்கும் என்றும் நீதிபதி விளக்கமளித்துள்ளார். அதேநேரத்தில் சிறுமிக்கு அவர் கடிதங்களையும் புகைப்படங்களையும் பகிரலாம் என்று அனுமதித்துள்ள நீதிபதி பின்னாட்களில் சிறுமி அவரை சந்திக்க விரும்பினால் சட்டப்பூர்வ பெற்றோரான அந்தப் பெண்கள் இருவரும் சிறுமியின் கோரிக்கையை ஏற்று உயிரணு தானம் செய்த நபரை சந்திப்பதற்கு அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
