திருமணமாகி 3 மாசத்தில் கணவருக்கு ஸ்லோ பாய்சனா.?. தமிழகத்தை உலுக்கிய மனைவியின் வாட்ஸ் அப் சாட்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான மூன்றே மாதத்தில், வாலிபரின் உடல்நிலை மோசமான நிலையில் அதன் பின்னர் தெரிய வந்த விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து.. கேப்டன் பட்லருக்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம்ம
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே அமைந்துள்ள ஆழ்வார் கோவில் என்னும் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டிட தொழிலாளியாக இவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் இறச்சகுளம் என்னும் பகுதியை சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
முதல் இரண்டு மாதங்கள் வடிவேல் முருகன் - சுஜா திருமண வாழ்க்கை நன்றாக சென்றுள்ளது. ஆனால், இதன் பின்னர் திடீரென ஒரு நாள் இரவு வடிவேல் முருகன் நினைவிழந்து கீழே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, வடிவேல் முருகனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் சில நாட்கள் கழித்து பின்பும் அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகவில்லை என தெரிகிறது.
அப்படி ஒரு சூழலில் கடந்த ஒரு மாத காலமாக மனைவியின் செயல்பாட்டில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் சுஜாவை கண்காணிக்கவும் துவங்கி உள்ளார். முன்னதாக, திருமணமான சில தினங்களில் திருமணத்திற்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவருடன் தற்போது எந்த தொடர்பும் இல்லை என சுஜா கூறியது வடிவேலுக்கு ஞாபகம் வந்துள்ளது.
இதனையடுத்து, மனைவியின் செல்போனை வடிவேல் முருகன் சோதனை செய்த போது முன்னாள் காதலருடன் வாட்ஸ் அப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், கொலை செய்ய திட்டமிட்ட பதிவுகளையும் கண்டு அதிர்ந்து போயுள்ளார் வடிவேல். கணவருக்கு கொடுக்கும் மருந்தை மாற்றி ஸ்லோ பாய்சன் கொடுப்பது குறித்து முன்னாள் காதலனுடன் WhatsApp Chat-ல் மனைவி பேசியதை கண்டு நடு நடுங்கி போயுள்ளார் வடிவேல் முருகன். இந்த நிலையில், மனைவி மீது இரணியல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் வடிவேல் முருகன். அதே போல, மனைவி மற்றும் முன்னாள் காதலனின் வாட்ஸ் அப் உரையாடல்களின் ஸ்க்ரீன் ஷாட்களையும் அவர் போலீசிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக நடந்த விசாரணையில், கணவரை கொலை செய்ய வேண்டும் என அப்படி செய்யவில்லை என்றும், வடிவேல் முருகன் தொல்லை கொடுத்து வந்த காரணத்தால் தனது மாத்திரையை அவரது மருந்துடன் சேர்த்து கொடுத்ததாகவும் சுஜா கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
Also Read | 2.5 வருஷத்துக்கு பிறகு தரையிறங்கிய ஆளில்லா விண்வெளி விமானம்.. வரலாற்றில் புதிய சாதனை.. முழு விபரம்..!

மற்ற செய்திகள்
