பி. காம் படிப்பு.. முன்னணி நிறுவனத்தில் வேலை.. எல்லாத்தையும் விட்டுட்டு இளைஞர் எடுத்த ரூட்.. அவங்க மனைவி குடுத்த ஐடியா தான் காரணமாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று சோஷியல் மீடியாவில் நிறைய நேரத்தை செலவழிக்கும் நம்மில் பலரும் ஏராளமான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வார்கள்.
![bcom graduate sells idly on his bike inspiring story melts heart bcom graduate sells idly on his bike inspiring story melts heart](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/bcom-graduate-sells-idly-on-his-bike-inspiring-story-melts-heart.jpg)
அதிலும் நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளவும் நமக்கு ஒரு வாய்ப்பு இந்த இணையம் மூலம் உருவாகும்.
அதில் சில விஷயங்களை நாம் கேள்விப்படும் போது மனதுக்கு மிகவும் நெருக்கமான வகையிலும் அவை இருக்கும்.
அப்படி ஒரு பட்டதாரி இளைஞர் குறித்த செய்தி தான் தற்போது நெட்டிசன்கள் பலரது இதயத்தையும் வென்று வருகிறது. இது தொடர்பாக இணையத்தில் வலம் வரும் தகவலின் அடிப்படையில், அவினாஷ் என்ற இளைஞர் ஒருவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் B. com படித்து முடித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, McDonalds உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களிலும் அவினாஷ் பணிபுரிந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்படியே சில ஆண்டுகள் ஓடிய பின் சொந்தமாக தொழில் தொடங்க எண்ணிய அவினாஷ், உணவு பிசினஸ் செய்ய முடிவு எடுத்துள்ளார். அதற்காக நிறைய பணம் வேண்டும் என்பதால், வேறொரு ரூட் பிடித்துள்ளார் அவினாஷ்.
ஹரியானாவின் பரிதாபாத் என்னும் பகுதியில் தனது பைக்கிலேயே தென் இந்திய உணவான இட்லி உள்ளிட்டவற்றை அவர் விற்பனை செய்து வருகிறார். மேலும், தனது குடும்பத்தினரையும் இதில் கிடைக்கும் வருமானம் கொண்டு தான் பார்த்து வருகிறார் அவினாஷ்.
அவினாஷ் மனைவி சென்னையை சேர்ந்தவர் என்பதால் அவர் தான் இப்படி ஒரு ஆலோசனையை கொடுத்ததாகவும் அவினாஷ் குறிப்பிட்டுள்ளார். இட்லி மற்றும் சாம்பாரை அவினாஷ் மனைவி தயார் செய்து கொடுக்க, அதனை காலையில் கொண்டு போய் பைக்கிலேயே அவினாஷ் விற்பனை செய்து வருகிறார்.
பி. காம் பட்டதாரியான அவினாஷ், தனது வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டு வருவதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)