மனைவி கொடுத்த ஹார்லிக்ஸ்.. கொரியரில் வந்த விஷம்.. கேரளாவில் அடுத்த அதிர்ச்சி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகன்னியாகுமரி மாவட்ட தமிழக கேரள எல்லையில் சமீபத்தில் தனது காதலருக்கு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம், தென் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Also Read | "டவுட்டே இல்ல, இவரு தான், ஆனா".. தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் விஷயத்தில் டிவில்லியர்ஸ் சொன்ன பதில்!!
ஷாரோன் ராஜ் என்ற இளைஞர், தனது காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்றிருந்த போது அங்கே கஷாயம் குடித்திருந்தார். இதில் விஷத்தை கிரீஷ்மா கலந்திருக்க, அதனை குடித்த ஷாரோனின் உடல்நிலை மோசமாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாரோன் ராஜ், பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர், கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததை கிரீஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாரோனிடம் சுற்றித் திரிந்த இடங்களிலும் கிரீஷ்மாவை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர். அதில், கடந்த இரண்டு மாதங்களில் 10 முறை குளிர் பானத்தில் மாத்திரைகள் கலந்து கொடுத்து ஷாரோனை கொல்லவும் முயன்றது தெரிய வந்துள்ளது.
குளிர் பானம் மற்றும் கசாயத்தில் மாத்திரைகள் மற்றும் விஷம் கொடுத்து இளைஞரை கொல்ல முயன்ற இளம்பெண் குறித்த செய்தி இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலத்தில் இது போன்று நிகழ்ந்த மற்றொரு சம்பவம், மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள - தமிழக எல்லையில் உள்ள பாறசாலையை அடுத்த நெடுவன்விழா என்னும் பகுதியை சேர்ந்தவர் சுதீர். இவர் போக்குவரத்து துறையில் டிரைவராக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, தனது மனைவி தனக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை சுதீர் கொடுத்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, திடீரென சுதீரின் உடல்நிலை மோசமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பாறசாலை மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சுதீருக்கு வெண்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளது. இதன் பின்னர் மெல்ல மெல்ல குணமடைந்த சுதீர் வீடு திரும்பி உள்ளார்.
வீட்டிற்கு திரும்பிய சுதீர், சில மாதங்கள் கழித்து பீரோவில் உள்ள துணிகளை அடுக்கி வைத்த போது அதில் இருந்த பொருட்களை கண்டு அதிர்ந்து போயுள்ளார். விஷம், ஊசிகள், கொரியர் கவர்கள் உள்ளிட்ட பொருட்கள் அங்கே இருந்துள்ளது. முன்னதாக, அடிக்கடி ஹார்லிக்ஸ் குடித்த சமயத்தில் தான் தனது உடல்நிலை மோசமானது என்பதை உணர்ந்த சுதீர், தனது மனைவி மற்றும் அவரது காதலர் இணைந்து தன்னை கொல்லவும் திட்டம் போட்டதை கண்டுபிடித்துள்ளார். மனைவியின் காதலன் கொரியர் மூலம் விஷம் அனுப்பி வைத்ததையும் அவர் அறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதற்கு மத்தியில், அவரது மனைவியும் காதலனுடன் வாழ தொடங்கியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், 4 வருடங்களுக்கு முன் சுதீர் புகாருக்கு போலீஸார் செவி சாய்க்கவில்லை என தெரிகிறது. தற்போது ஷாரோன் ராஜ் - கிரீஷ்மா விவகாரம் பெரிய அளவில் வெடித்ததால் மீண்டும் மனைவி மற்றும் அவரது காதலன் மீது புகார் ஒன்றை மீது கொடுத்துள்ளார் சுதீர்.

மற்ற செய்திகள்
