காரில் இருந்த வேறொரு பெண்.. கேள்வி கேட்ட மனைவி.. படத் தயாரிப்பாளர் செய்த பதறவைக்கும் காரியம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 28, 2022 12:14 AM

தனது கணவர் தன்மீது வாகனத்தை மோதியதாக திரைப்பட தயாரிப்பாளரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

Kamal Mishra Rams Wife With Car cops starts investigation

தனது கணவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கமல் கிஷோர் மிஸ்ராவை வாகனத்தில் மற்றொரு பெண்ணுடன் பார்த்ததாகவும், அப்போது தன்மீது அவர் காரை ஏற்றியதாகவும் கமல் கிஷோர் மிஸ்ராவின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புறநகர் அந்தேரியில் (மேற்கு) குடியிருப்பு கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் அக்டோபர் 19 அன்று நடந்த இந்த சம்பவத்தில் கமல் மிஸ்ராவின் மனைவி காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கமல் மிஸ்ராவின் மனைவி தனது கணவரைத் தேடி வெளியே வந்தபோது, ​​​​பார்க்கிங் பகுதியில் அவரது காரில் மற்றொரு பெண்ணுடன் அவர் இருப்பதை மனைவி கண்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் மிஸ்ராவின் மனைவி அவரை எதிர்கொள்ளச் சென்றபோது, ​​​​கமல் மிஸ்ரா அந்த இடத்திலிருந்து தப்பிக்க காரை ஓட்டிச் சென்றதாகவும், அப்போது அவர்மீது கார் மோதியதாகவும் தெரிகிறது. இதனால் அந்த பெண்மணியின் கால்கள், கைகள் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அம்போலி காவல்நிலையத்தில் கமல் மிஸ்ராவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 279 (ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது) மற்றும் 337 (மற்றவர்களின் உயிருக்கோ தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பது) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமல் மிஸ்ரா இந்த ஆண்டு வெளியான தேஹாட்டி டிஸ்கோ எனும் படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர்மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

Tags : #KAMAL MISHRA #WIFE #CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamal Mishra Rams Wife With Car cops starts investigation | India News.