உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து.. வாழ்த்திய விராட் கோலி..! என்ன சொல்லிருக்காரு.? T20 WORLDCUP FINAL
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியை முதல் ஆளாக இந்திய வீரர் விராத் கோலி வாழ்த்தியுள்ளார்.
அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, இன்று ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர் கொண்டனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில் மசூத்- 38 (28) ரன்கள் எடுத்தார்.பாபர் - 32 (28) ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சாம் கரண் 3 விக்கெட்டுகள் எடுத்தார். ரஷித் & ஜோர்டான் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
இரண்டாவது பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. துவக்க வீரர் ஹேல்ஸ் 1 ரனனில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பட்லர் 26 (17) ரன்கள் குவித்தார். மொயின் அலி 19 ரன்கள் குவித்தார். இறுதியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 52 ரன்கள் குவித்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலககோப்பையை வென்றது. இங்கிலாந்து வீரர் சாம் கரண், ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்றதை அடுத்து இந்திய வீரர் விராத் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் இறுதிப் போட்டி பார்த்த புகைப்படத்தை பகிர்ந்து "வாழ்த்துகள் இங்கிலாந்து. உலகக்கோப்பை வெல்வதற்கு தகுதியானவர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.