"அய்யா, என் புருஷன கடத்திட்டாங்க".. புகார் கொடுத்த 2 வது மனைவி.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!.. கணவன் பிளான் எல்லாம் வேஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்னும் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் கெய்க்வாட். இவருக்கு மொத்தம் இரண்டு மனைவிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனிடையே, சந்தீப்பின் இரண்டாவது மனைவியான சுனிதா என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது கணவரை கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சுனிதா கொடுத்த தகவலின் படி, கணவன் மனைவி இருவரும் சாலையில் நின்று சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அங்கே ஆட்டோ ரிக்ஷாவில் வந்த மூன்று பேர், சந்தீப்பை கடத்தி விட்டு சென்றதாவும் சுனிதா குறிப்பிட்டுள்ளார்.
சுனிதா அளித்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதில் இருந்த ஆட்டோ மற்றும் அதன் டிரைவரை அடையாளம் கண்டுள்ளனர். அப்போது போலீசாரிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர், ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் ஆகிய மூன்று பேரும் தனது ஆட்டோவை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து சென்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நடந்த விசாரணையில், சந்தீப்பை கடத்திய மூன்று பேரும் சுமார் இரண்டு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து சந்தீப் பைக் ஒன்றில் தனியாக சென்றதும் தெரிய வந்துள்ளது. கடத்தல் என்ற சூழ்நிலையில், சந்தீப் பைக்கில் சென்ற விஷயம் அப்படியே இந்த வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது.
ஆட்டோவில் வந்த மூவரும் சந்தீப்பின் நண்பர்கள் தான் என்பது உறுதியான நிலையில், இது ஒரு போலியான கடத்தல் நாடகம் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், நண்பர் வீட்டில் இருந்த சந்தீப்பையும் போலீசார் கைது செய்தனர். அவரும் இதனை போலி கடத்தல் என ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, சுனிதாவின் தாயார் மீது இந்த கடத்தல் பழியை போடச் சொல்லியும் தனது நண்பர்களிடம் சந்தீப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
முதல் மனைவி சந்தீப்புடன் இணைந்து வாழவில்லை என கூறப்படும் நிலையில், அவரை விவாகரத்து செய்யாமல் சுனிதாவை திருமணம் செய்து கொண்டும் அவர் வாழ்ந்து வந்துள்ளார். மேலும், சுனிதாவிடமும் அடிக்கடி தகராறு உருவாகி வந்ததால் தனது இரண்டு மனைவிகளுக்கு தன் மீது அனுதாபமும், அன்பும் உருவாவதற்காக இந்த கடத்தல் நாடகத்தை சந்தீப் அரங்கேறியதும் தெரிய வந்துள்ளது.
ஆனால், கடைசியில் போலீசிலும் சந்தீப் உள்ளிட்டோர் சிக்கியதால், மொத்த பிளானும் சுக்கு நூறாகி போனது.

மற்ற செய்திகள்
