'மர்ம' சூட்கேஸ்.. உள்ளே இருந்த பெண்ணின் சடலம்.. திணறிய போலீஸ்க்கு உதவிய ஆட்டோ டிரைவரின் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலம், குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்னும் பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கேட்பாரற்று நிலையில் கிடந்த சூட்கேஸ் ஒன்று, அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடம் வந்த போலீசார், அந்த மர்ம சூட்கேஸை திறந்து பார்த்துள்ளனர். அதற்குள், பெண் ஒருவரின் உடல் இருந்தது அனைவரையும் திடுக்கிட வைத்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண் யார் என்பது பற்றியும், கொலையை செய்தது யார் என்பது பற்றியும் தடயங்கள் மற்றும் சிசிடிவி அடையாளங்கள் வைத்து விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலையில், அப்பகுதியில் ஆட்டோவில் வந்த நபர் ஒருவர், சூட்கேஸை சாலையில் வைத்து விட்டு சென்றது சிசிடிவி மூலம் தெரிய வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர், ஆட்டோ எண் மூலம் விசாரித்த போலீசார், அந்த ஆட்டோ ஓட்டுனரை கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது, சிர்ஹவுல் என்னும் கிராமத்தில் ஒருவர் சூட்கேஸுடன் ஏறிய தகவலை ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவில் ஏறிய நபரை அடையாளம் காட்ட பின் பல்வேறு அதிர வைக்கும் தகவல்கள் தெரிய வந்தது.
சூட்கேஸை வைத்த நபர் பெயர் ராகுல் என்பதும், அதற்குள் கொலை செய்யப்பட்டிருந்த பெண் ராகுலின் மனைவி என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராகுலின் மனைவியான பிரியங்கா, குடும்பத்தை உதறி விட்டு ராகுலை கரம்பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ராகுலின் சம்பளம், குடும்பம் நடத்தவே சரியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மனைவி பிரியங்கா, அடிக்கடி செல்போன், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதன் பெயரில், அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்கள் முன்பாகவும் அவர்களுக்கு இடையே மோதல் உருவாகி உள்ளது. அப்போது சண்டை முற்றி அடிதடியான போது கடும் கோபத்தில் இருந்த ராகுல், மனைவி பிரியங்காவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் கடைக்கு சென்று சூட்கேஸ் வாங்கி வந்த ராகுல், மனைவியின் உடலை அதில் வைத்துள்ளார். ராகுல் பெயர் மனைவியின் கையில் பச்சை குத்தி இருந்ததால், அதனை நீக்கி காயம் உருவாக்கவும் செய்துள்ளார் ராகுல். பின்னர், ஆட்டோவில் ஏறி ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் சூட்கேஸை அவர் போட்டு விட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அதே போல, தான் சிக்க மாட்டோம் என்று நினைத்து வழக்கம் போல வேலைக்கு சென்று வந்த ராகுல், சிசிடிவி மற்றும் ஆட்டோ டிரைவர் கொடுத்த தகவல் மூலம் சிக்கி உள்ளார்.

மற்ற செய்திகள்
