2.5 வருஷத்துக்கு பிறகு தரையிறங்கிய ஆளில்லா விண்வெளி விமானம்.. வரலாற்றில் புதிய சாதனை.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்விண்வெளியில் 908 நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று தற்போது தரையிறங்கியுள்ளது. இது, அறிவியல் உலகில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
Also Read | உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து.. கேப்டன் பட்லருக்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்சன் இருக்கா? செம்ம
விண்வெளி எப்போதுமே பல்வேறு ஆச்சர்யங்களை தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது. விண்வெளியின் பல மர்மங்களை மனிதர்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், விண்வெளியை பொறுத்தவரையில் விடை காணமுடியாத பல கேள்விகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன என்பதே உண்மை. அந்த வகையில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தொடர்ந்து பல்வேறு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒருபகுதிதான் இந்த ஆளில்லா விண்வெளி விமான பரிசோதனை. முழுவதும் சூரிய ஒளியால் இயங்கக்கூடிய X-37B விண்வெளி விமானத்தை நாசா உருவாக்கியது. முதன் முதலாக 2010 ஆம் ஆண்டு விண்வெளியில் இந்த விமானம் ஏவப்பட்டது. இதுவரையில் 6 முறை விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த விமானம் பல்வேறு அறிவியல் பரிசோதனைகளுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறது.
முன்னதாக, இந்த விமானம் 780 நாட்கள் புவிவட்ட பாதையில் ஆராய்ச்சி பயணத்தை முடித்து பூமிக்கு திரும்பியது. அந்த வகையில் தற்போது 908 நாட்கள் (சுமார் 2.5 வருடம்) புவியை சுற்றி முடித்து தற்போது அமெரிக்காவின் கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இதுவரையில் இந்த விமானம் மொத்தமாக 3,774 நாட்களில் 1.3 பில்லியன் மைல்கள் பயணித்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமான ஆராய்ச்சி ஆய்வகத்தை கொண்டுள்ள இந்த விமானம் பார்ப்பதற்கு விண்கலம் போலவே இருந்தாலும், இது அளவியில் சிறியதாக இருக்குமாம்.
அதாவது இந்த விண்வெளி விமானம் 9 மீட்டர் நீளம் கொண்டது தான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மற்றும் சில தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சிக்கு இந்த விமானம் உறுதுணையாக இருந்திருக்கிறது. விண்வெளியில் சுமார் 908 நாட்கள் பயணம் முடித்தபிறகு X-37B விண்வெளி விமானம் தற்போது தரையிறங்கியிருப்பது விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
Also Read | "இதுக்கு பேர் தான் கர்மா"..பாகிஸ்தான் தோல்விக்கு அக்தர் போட்ட எமோஜி.. இந்திய பவுலர் 'நச்' Reply!