'வரும் மாதத்தில்' இருந்து 'ரேஷன் பொருட்களை' பெறுவதற்கு 'இப்படி ஒரு ஐடியா!'.. தமிழக அரசு அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா சூழலில் கூட்ட நெரிசலை குறைக்க அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை நடைமுறைக்குக் கொண்டுவர இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் விலை இல்லா பொருட்கள் செப்டம்பர் மாதம் முதல் வீடு தேடி வரும் என்றும், இவை ரேஷன் கடைகளை மூடுவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் அல்ல என்றும் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கென ஒரு நாளைக்கு 200 டோக்கன்கள் என செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதிவரை வழங்கப்படுவதாகவும், செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அதிரடியான திட்டமும், கொரோனா சூழலில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசின் முன்னெடுப்பும் பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.