'3 லட்சத்தை கடந்த பாதிப்பு'... 'முதல்வர் இந்த முடிவை எடுப்பாரா'?... மருத்துவ குழுவுடன் முக்கிய ஆலோசனை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மருத்துவக் குழுவுடன் முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது 3 லட்சத்தைக் கடந்துள்ளது. அதே நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையில் அது முடிய இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது மேலும் தளர்வுகள் வழங்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் முதல்வர் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்வது குறித்தும் முக்கிய முடிவை முதல்வர் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் அடுத்த ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
