'நான் வாய தொறந்தா,உங்க காது சவ்வு கிழிஞ்சிடும்'...முதல்வருக்கு ஏன் இவ்வளவு கோபம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 08, 2019 02:46 PM

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும், பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதலமைச்சர் பழனியில் பரப்புரை செய்தார்.அப்போது அவர் பரப்புரையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN CM Edappadi Palanisamy condemned stalin speech

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தம்மை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து வருவதாகவும், நாங்கள் பேசினால் காது சவ்வு கிழிந்து விடும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக கடுமையாக பேசினார்.நாங்கள் மத்திய அரசு மக்களுக்கு செய்த பல நல்ல திட்டங்களை குறித்து பேசி வருகிறோம்.ஆனால் மு.க.ஸ்டாலின் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்.

பொள்ளாச்சி விவகாரத்தை ஸ்டாலின் அரசியலாக்க பார்க்கிறார்.அதில் எப்படி ஆதாயம் தேடலாம் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.ஆனால் அந்த விவகாரத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பேசினார்.இதனைத்தொடர்ந்து  கோவை மக்களவைத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.