'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்...' 'தமாகா தலைவர் ஜி.கே.வாசன்...' - தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமாகா தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து தே.மு.தி.க., த.மா.கா., புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி. உள்ளிட்டோர் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நடத்தினர்.
அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்
