'வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு...' - ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மொத்தம் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்பது பாமகவின் நெடுநாள் கோரிக்கை. பின்னர் மிக பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீடு தேவை என பாமக கோரியது.
இந்த கோரிக்கையை ஏற்று மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%; சீர் மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மற்ற செய்திகள்
