நெருங்கும் சட்டமன்ற தேர்தல்... 'அதிமுக' வேட்பாளர் 'நேர்காணல்' குறித்து... 'தலைமை' வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் மாதம் 12 ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும், தமிழக தேர்தல் முடிவுகள் மே மாதம் இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமே உள்ள நிலையில், தமிழக கட்சிகள் அனைத்தும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விஷயங்களில் தீவிரம் காட்டி வருகிறது.
இதில், அதிமுக கட்சி, அதிகாரபூர்வமாக தங்களது கூட்டணியில், பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தமிட்டிருந்தது. மற்ற கட்சிகளும், அதிமுக கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிமுக சார்பில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், நாளை மறுநாள் நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதன்படி, மார்ச் 4 ஆம் தேதியன்று, காலை 9 மணி முதல், மாவட்ட வாரியாக, சென்னை ராணிப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட, விருப்ப மனுவை அளிக்க, மார்ச் ஐந்தாம் தேதி தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மார்ச் மூன்றாம் தேதி தான் கடைசி நாள் என அதிமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
