'இடைக்கால பட்ஜெட்'... 'குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம்'... தமிழக அரசின் 'அம்மா காப்பீடு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 23, 2021 06:19 PM

தமிழகத்தில் குடும்பத் தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu launches accident-cum-life insurance scheme

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓபிஎஸ் 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து இருக்கிறார். 15-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடர் என்பதால் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையைத் தமிழக அரசே ஏற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்பத் தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும்.

குடும்பத் தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu launches accident-cum-life insurance scheme | Tamil Nadu News.