'எனக்கு ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு...' 'அவங்க கொஞ்சம் நேரம் கூட நின்னு விளையாடிருக்கலாம்ல...' வாஷிங்டன் சுந்தரின் தந்தை விமர்சனம்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது..
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி பேட்டிங் செய்தபோது 96 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் விளையாடினார்.
இதில் இவர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபோது, எதிர்முனையில் பேட்டிங் செய்த இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
அதமூலம் சதம் அடிக்காமல் தடுத்தார் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் போட்டிக்குப் பின் பேசிய வாஷிங்டன் சுந்தர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.
இந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்ததைக் குறித்து அவரது தந்தை சுந்தர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''டெய்ல் எண்டர்களால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அவர்களால் சிறிது நேரம் கூட தாக்குப்பிடித்திருக்கலாம். வெற்றிபெற 10 ரன்கள் தேவை எனும் சூழல் இருந்திருந்தால்கூட இது பெரிய தவறு அல்ல. லட்சக்கணக்கான இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டெய்ல் எண்டர்கள் என்ன பண்ணினார்கள் என்பதை அவர்களை பார்த்து கற்றுக்கொள்ளக்கூடாது’’ என கருத்து தெரிவித்துள்ளார்.