'இந்தியாவில் முதன் முறையாக... கொரோனா பரவலைத் தடுக்க... சந்தையில் 'கிருமிநாசினி சுரங்கம்' அமைத்த திருப்பூர்!'... அசத்தும் ஆட்சியர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 01, 2020 04:18 PM

இந்தியாவிலேயே முதல் முறையாக கொரோனாவைக் கட்டுப்படுத்த திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

tiruppur installs disinfectant tunnel amid coronavirus outbreak

கொரோனா வைரஸை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொன்டு வருகின்றன. இந்த முன்னெடுப்புகளில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மாவட்ட நிர்வாகத்தின் பங்கு மிக முக்கியமானது.

மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று தீவிரமானதையடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கும் நேரம் மதியம் 2.30 வரை குறைக்கப்பட்டது. இதனால், முன்பை விட தற்போது காலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில், அதிக மக்கள் கூடுவதால் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அதனை தடுக்கும் விதமாக திருப்பூரில் காலையில் சந்தைக்கு வருபவர்கள் கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் அனுமதிக்கப்பட்டு பின்னர் சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜயகார்த்திகேயன், அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் சந்தையில், அத்திவாசியப் பொருட்களை வாங்க வரும்போது மக்கள், கிருமி நாசினி சுரங்கப்பாதைக்குள் 3 முதல் 5 நொடிகள் செல்ல அறிவுறுத்தப்பட்டு, அதன் பின் கைகழுவிய பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பூரில் கொரோனாவை எதிர்த்து போராடும் மக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Tags : #CORONA #CORONAVIRUS #TIRUPPUR #COLLECTOR