'வேலிடிட்டி' அதிகரிப்பு... 'இலவச' வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ்... பிரபல நிறுவனத்தின் 'அதிரடி' அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > வணிகம்ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வேலிடிட்டியை நீட்டித்து, இலவச அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை வழங்குகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பெரும்பாலான நாடுகள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நிறுவனங்கள் பலவும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 வரை வேலிடிட்டியை நீட்டிப்பதாகவும், 100 நிமிடங்களுக்கு இலவச வாய்ஸ் கால் மற்றும் 100 எஸ்.எம்.எஸ். ஆகியவற்றை வழங்குவதாவும் அறிவித்துள்ளது. இதுதவிர ஏடிஎம், யுபிஐ, கால், எஸ்.எம்.எஸ். மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Tags : #CORONAVIRUS #AIRTEL #JIO #VODAFONE #BSNL