காலிங் பெல் வேலை செய்யல.. போனையும் எடுக்கல... வீட்டின் பின்புறம் சடலமாக கிடந்த இளைஞர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 24, 2023 11:01 AM

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியை அடுத்த தாயப்பார் என்ற இடத்தில் வசித்து வந்தவர் தென்னரசு. இவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

Tirupattur Youth found dead backside of his home

Also Read | "அர்ஜுன் டெண்டுல்கரை விட நான்தான்ப்பா அதிர்ஷ்டசாலி".. சின்ன வயசுல தந்தையை கண் கலங்க வெச்ச இளம் வீரர்.. எமோஷனல் பின்னணி!!

இதனிடையே, சமீபத்தில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று நள்ளிரவு நேரத்தில் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் தென்னரசு. அந்த சமயத்தில் வீட்டின் காலிங் பெல் வேலை செய்யாத நிலையில் மனைவிக்கு பலமுறை அவர் போன் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனைவி நல்ல தூக்கத்தில் இருந்தால் கணவனின் அழைப்பையும் எடுக்காமல் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து மறுநாள் காலை வரை கணவர் வராததால் தனது உறவினருக்கு தகவலை கூறியுள்ளார் புனிதா. அப்போது தென்னரசுவின் பைக் வெளியே இருந்ததாகவும் தெரிய வர, அவரது எண்ணிற்கு அழைத்த போது அருகே மொபைல் சத்தம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அங்கே வீட்டின் பின்  புறத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் தென்னரசு.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, வீட்டிற்கு செல்ல மூன்றாவது மாடிக்கு பின்புறம் சென்று பைப்லைன் வழியாக தென்னரசு ஏறிய போது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், தென்னரசு உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்னரசு நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரைப் பிடித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பாக போலீசார் தரப்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | ICC : கேப்டன் பட்லர்.. அணியில் மாஸ் காட்டும் முக்கிய இந்திய வீரர்கள்.. பரபர லிஸ்ட்..!!

Tags : #TIRUPATTUR #YOUTH #HOME

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tirupattur Youth found dead backside of his home | Tamil Nadu News.