“தமிழகம் இல்ல.. தமிழ்நாடு.. மொதல்ல அதை ஒத்துக்கணும்” - பிக்பாஸ் ஃபினாலேவில் கமல்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Jan 23, 2023 08:29 PM

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கிராண்ட் ஃபினாலே நடந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tamilnadu Not Tamilagam Says Kamal Haasan Bigg Boss finale

Also Read | நாட்டுக்கு திரும்ப முடியாத அளவுக்கு, தமிழ்நாட்டில் bigg boss ஜனனிக்கு குவியும் வாய்ப்புகள்..?!

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

Tamilnadu Not Tamilagam Says Kamal Haasan Bigg Boss finale

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் ஃபினாலேவில் விக்ரமன் & அசிம் இருவரில் அசிமின் வெற்றியை அறிவிப்பதற்கு முன்பாக, கையை மாற்றி மாற்றி ஆட்டி விளையாட்டு காட்டிய கமல் இறுதியாக அசிம் வெற்றி பெறுவதாக அறிவித்தார்.

Tamilnadu Not Tamilagam Says Kamal Haasan Bigg Boss finale

வெற்றி பெற்ற அசிம் கோப்பையை உயர்த்திக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன், அவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுக்கான காசோலையும், இந்தியாவில் அறிமுகமாகும் மாருதி சுசுகி காரின் பிரஸ்ஸா எனும் மாடலின் முதல் காரும் பரிசாக வழங்கப்பட்டது.

Tamilnadu Not Tamilagam Says Kamal Haasan Bigg Boss finale

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய கமல், “மெட்ராஸ், டுடுகோரின், ட்ரிச்சு, கே.காமரி அனைத்தும் முறையே சென்னை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி என தீர்க்கமாக சொல்ல வேண்டுமென்றால் முதலில் தமிழகம் இல்ல தமிழ்நாடு... முதலில் அதை ஒத்துக்கணும்” என ஆணித்தரமாக குறிப்பிட்டார்.

Also Read | டைட்டில் வென்ற அசிமின் அடுத்த ப்ளான் இதுதானா.? ஃபினாலேவில் அவரே சொன்ன விஷயம்.. bigg boss 6

Tags : #BIGG BOSS TAMIL #BIGG BOSS 6 TAMIL #BIGG BOSS GRAND FINALE #KAMAL HAASAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu Not Tamilagam Says Kamal Haasan Bigg Boss finale | Tamil Nadu News.