சென்னை : இருசக்கர வாகனத்துக்கு வாட்டர் வாஷ் செய்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து பலி !! பதைபதைப்பு சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கொடுங்கையூரில் வண்டியை வாஷ் பண்ணும் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read | 50 வயதில் 60 ஆவது குழந்தைக்கு தந்தையான நபர்.. "4 வது மனைவியை கல்யாணம் பண்ணி இன்னும்".. வைரலாகும் கதை!!
சென்னை கொடுங்கையூர் பகுதியில் இருக்கும் இளைஞர் ஒருவர் வாகனத்திற்கு வாட்டர் வாஷ் செய்யும் பணியை செய்து வருகிறார், அங்குதான் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது. சென்னை கொடுங்கையூர் காளமேகம் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் என்கிற இளைஞர். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வாகன வாட்டர் வாஷ் கடை வைத்திருக்கிறார். இங்கு கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஆகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
யுவராஜின் கடைக்கு வரக்கூடிய வண்டிகளுக்கு வாட்டர் செய்யும் பணி தான் ஆகாஷ் செய்ய வேண்டிய பணி. இந்த நிலையில் தான் கடைக்கு வந்த இருசக்கர வாகனங்களுக்கு ஆகாஷ் வாட்டர் செய்து வந்த நிலையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி இருசக்கர வாகனங்களுக்கு ஆகாஷ் வாட்டர் வாஷ் செய்து கொண்டிருந்தபோது திடீரென தண்ணீர் மூலம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மயங்கி சுருண்டு விழுந்தார்.
உடனே பதறிய அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொடுங்கையூர் காவல்துறை ஆய்வாளர் சரவணன், ஆகாஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு அடுத்து செல்லப்பட்ட பிறகு ஆகாஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஆகாஷின் பிரேதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடையிலிருந்த சிசிடிவி காட்சிகளை பரிசோதனை செய்த போலீசார், அவற்றை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read | "மொத்தமா 560 உடல்கள்.." உடல் உறுப்புகளை வைத்து தாய், மகள் செய்த காரியம்.. அமெரிக்காவை நடுங்க வைத்த பின்னணி!!

மற்ற செய்திகள்
