எல்லாத்துக்கும் BIKE தான் காரணமா?.. இளைஞர் செய்த செயலால் மனமுடைந்த குடும்பம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்றோர் பைக் வாங்கி தராத காரணத்தினால் இளைஞர் ஒருவர் எடுத்த முடிவு தொடர்பான செய்தி, தற்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கீழவாசல் பகுதியில் பூமாலை ராவுத்தர் கோவில் தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் பெயர் நந்தகுமார் (வயது 22). இவர் படித்து விட்டு அலுமினிய தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இந்த நிலையில், தனக்கு பைக் வேண்டும் என்றும் தந்தை கோவிந்தராஜிடம் நந்தகுமார் கேட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
சுமார் 1.5 லட்ச ரூபாய் விலை மதிப்புள்ள பைக் ஒன்று வேண்டுமென தொடர்ந்து பெற்றோரிடம் நந்தகுமார் கேட்டு வர, அன்றாட கூலி வேலை செய்யும் தந்தை கோவிந்த ராஜால் அதற்கு முடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், பைக் வாங்கி தர பெற்றோர் தாமதம் ஆக்கியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன் விரக்தியில் இருந்த நந்தகுமார் விபரீத முடிவு ஒன்றையும் எடுத்துள்ளார். கல்லணை கால்வாய் நடைபாதையில் வைத்து விபரீத முடிவை நந்தகுமார் எடுத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், அதனை செல்ஃபி வீடியோவாகவும் பதிவு செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதில் அனைவருக்கும் நந்தகுமார் டாடாவும் சொன்னதாக தெரியும் நிலையில், இது தொடர்பான வீடியோவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தகுமாரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உடனடியாக சம்பவ இடம் சென்று நந்தகுமாரை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் நந்தகுமார்.
பெற்றோரால் பைக் வாங்கி தராத காரணத்தினால், இளைஞர் எடுத்த விபரீத முடிவு தொடர்பான செய்தி, தற்போது அப்பகுதியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Also Read | "பொறந்தது இரட்டை குழந்தைங்க, ஆனா வேற வேற வருசத்துல".. "அட, எப்படி பாஸ் இது நடந்துச்சு?".. சுவாரஸ்ய பின்னணி

மற்ற செய்திகள்
