“மெயின் டியூட்டியே இதுதான்.. அன்னைக்கு கூடுதலா அதையும் சேத்து செஞ்சிட்டேன்!”.. கல்யாண வீட்டில் உறவினர் போல் நடித்து ‘மொய்ப் பணத்தை’ அபேஸ் செய்த நபர் சிக்கினார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகும்மிடிபூண்டி அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர் போல நடித்து மொய் பணத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த மாதம் 28ம் தேதி இரவு நவீன் - பிந்து ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, மணமேடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், “இரவு உணவு சாப்பிட்டு விட்டு வாங்க..” என்று சொல்லி மொய் பணம் வாங்கிக் கொண்டிருந்த வரை அனுப்பியுள்ளார்.
உறவினர்கள் என நம்பி அவரும் உணவு அருந்த செல்லவே அந்த மர்ம நபர், மணப்பெண், மணமகள் பின்னாலேயே நின்று மொய்ப் பணத்தை வாங்கி, அந்த பணத்துடன் மாயமாகினார். இது தொடர்பாக விசாரித்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு, தேர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஈசன் என்பவரை கைது செய்தனர்.
அவரை விசாரித்தபோது, எப்போதும் டிப்டாப் உடையணிந்த விசேஷ வீடுகளில் புகுந்து உணவு அருந்துவதை வழக்கமாகக் கொண்ட ஈசன், சம்பவத்தன்று ஒரு படிமேலே போய், மொய்ப் பணத்தையும் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் மொய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்ற செய்திகள்
