'பக்கா பிளானோடு...' 'மூணு மாசத்துல மூணு திருமணம்...' '15 நாள்ல ஆள் எஸ்கேப்...' - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதங்களில் 3 திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் தங்கள் பணிகளை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான பெண் ஒருவரும் வருமானம் இழந்து வாழ்க்கையை நகர்த்த சிரமப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவரும் வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் அவர் பணத்திற்காக, கடந்த 3 மாதங்களில் 3 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளனர்.
திருமணம் முடிந்து 15 நாட்களுக்குள் அந்த ஆண்களின் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு தப்பி செல்வது தான் அவரது வழக்கம். இதேபோல் 3 ஆண்களை ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 3 ஆண்களில் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர்.
தன்னுடைய மனைவியை காணவில்லை என தேடிய போதுதான், அவர் திருமணம் செய்து மோசடி வேலைகளில் ஈடுபடுவது தெரியவந்தது.
பணத்திற்காக அந்த 3 ஆண்களை ஏமாற்றியதாக விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மற்ற இருவரும் அவர் மீது எந்த புகாரும் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது

மற்ற செய்திகள்
