'பக்தி சேனலில் இருந்து வந்த மெயில்... லிங்க்-அ கிளிக் பண்ணா... 'அந்த' மாதிரி படங்களுக்கு போகுது'... அதிர்ந்து போன பக்தர்... விசாரணையில் 'பகீர்' தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி சேனலில் நிகழ்ச்சி தொடர்பான லிங்க் கேட்டதற்கு, ஊழியர் ஒருவர் ஆபாச பட லிங்க்-ஐ அனுப்பியதால் அதிர்ச்சிக்குள்ளானார்.
![andhra man receives porn link in mail instead of religious material andhra man receives porn link in mail instead of religious material](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/andhra-man-receives-porn-link-in-mail-instead-of-religious-material.jpg)
திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நடத்தி வருகிறது. ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் ஒருவர் பக்தி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை கேட்டுள்ளார். அதுதொடர்பான லிங்கை அனுப்புவதற்கு தன்னுடைய மெயில் ஐடி-யை கொடுத்துள்ளார்.
பக்தி சேனலில் இருந்து லிங்க் அனுப்பி வைக்கப்பட்டது. அதை திறந்து பார்த்த பக்தருக்கு பேரதிர்ச்சி. லிங்க் ஆபாச இணைய தளத்திற்கானது.
இதனால் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்த அந்த பக்தர், திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மன், உள்பட தொடர்புடையவர்கள் மீது புகார் அளித்தார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தெலுங்கு தேசம் கட்சியை போராட்டத்திற்கு தூண்டியுள்ளது. மேலும், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விசாரணையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் வேலைப்பார்க்கும் பணியாளர் ஒருவர் ஆபாசப்படம் மற்றும் வீடியோக்கள் வேலை நேரத்தின்போது பார்த்ததாக தெரிய வந்துள்ளது. அவர் பக்தரருக்கு தவறாக இந்த லிங்கை அனுப்பியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)