"இந்த நேரத்துல என்னயா வியாபாரம்"... சோளத்த 'ரோட்டு'ல தூக்கி போட்டு... 'தள்ளுவண்டி'யை தலைகீழா புரட்டி... அராஜகம் செய்த 'எஸ்.ஐ'... சர்ச்சையை கிளப்பிய 'வீடியோ'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியில் இருந்த சோளத்தை தூக்கி ரோட்டில் வீசி, இறுதியில் அந்த வண்டியை தலை கீழாக தள்ளி விட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி கடும் சர்ச்சையை கிளப்பியது. ஊரடங்கு காலத்தில் போலீசார்கள் பல பகுதிகளில் இது போன்ற அநாகரீக செயலில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிகம் பேசு பொருளான நிலையில், உயர் அதிகாரி ஒருவர், சப் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டதுடன் சம்மந்தப்பட்ட தள்ளு வண்டி உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தள்ளுவண்டி உரிமையாளர் ஊரடங்கு நேரமான மாலை ஐந்து மணிக்கு பின், வியாபாரம் செய்தாரா அல்லது அந்த சப் இன்ஸ்பெக்டர் வேறு ஏதேனும் கோபத்தில் இப்படி தகராறு செய்தாரா என்பது சரிவர தெரியவில்லை.
सुनो दारोगा जी, जिस तरह तुमने गरीब का ठेला पलटा है. उसी के टैक्स से तुम्हे पगार मिलती है. उसी के पैसे से तुम्हारा घर चलता है इसी गरीब के पैसे से तुम्हारा बच्चा पलता है. इसी के टैक्स के पैसे से मौज करते हो. लोकतंत्र है याद रखना जब जनता तुम्हारा ठेला पलटेगी तो बनारस में रोते घूमोगे pic.twitter.com/mVD19KBbZs
— Brajesh Misra (@brajeshlive) August 10, 2020

மற்ற செய்திகள்
