கல்யாணமாகி 1½ மாசம் தான் ஆகுது... 'புதுப்பொண்ணு'ன்னு கூட பாக்காம இப்படி பண்ணிட்டாங்களே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சம்பவ தினத்தன்று வீட்டில் இருந்த பிரகதி மோனிகா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டுக்கு வந்த கணவர் செல்வபாண்டியன் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரகதி மோனிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
புதுப்பெண் வீட்டில் இருந்ததை அறிந்து மர்ம நபர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்து இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். மேலும் மரணத்திற்கு முன் பிரகதி மோனிகா அவர்களுடன் வெகுவாக போராடி இருப்பதாகவும் தெரிகிறது. மர்ம நபர்கள் நகைகளுக்காக வந்தவர்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
