இவங்களுக்கு எல்லாம் நான் ரொம்ப 'நன்றிக்கடன்' பட்டுருக்கேன்... சுஷாந்தின் 'டைரி'யை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகை!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் சுஷாந்த் எழுதியதாக கூறப்படும் டைரியின் ஒரு பக்கத்தை ரியா சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு அவரது காதலி ரியா தான் காரணம் என தந்தை கே.கே.சிங் பீஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு மத்தியில் நடிகர் சுஷாந்த் எழுதிய டைரி என ரியா அவரது வக்கீல் மூலமாக சமூக வலைதளத்தில் டைரியின் ஒரு பக்கத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில், ''நான் என் வாழ்க்கைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனது வாழ்வில் லில்லுவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பெபுவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் மேடமுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் புட்ஜிக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்,'' என கூறப்பட்டு உள்ளது.
இதில் பெபு என்று குறிப்பிட்டு இருப்பது ரியா எனவும், லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும், சார் என்பது ரியாவின் தந்தை எனவும், மேடம் அவரின் தாய் எனவும், புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
