'அதிகாலையில் 100ஐ அழைத்து பெண் சொன்ன தகவல்'... '3 நிமிடத்தில் குற்றவாளிகளைப் பிடித்த போலீசார்'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவல்துறை உங்கள் நண்பன் என்ற கூற்றுக்கு இணங்க, சென்னை போலீசார் குற்றவாளிகளைக் கைது செய்துள்ள சம்பவம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை நீலாங்கரையில் வசிக்கும் பெண் ஒருவர், இன்று அதிகாலை அவசர எண் 100ஐ அழைத்தார். அப்போது பேசிய அந்த பெண் தனது வீட்டின் முதல்தளத்தில் திருட்டு நடப்பதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார். உடனே அலெர்ட்டான போலீசார், ரோந்து பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள். இதையடுத்து அடுத்து மூன்று நிமிடத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற ரோந்து போலீசார் திருடர்களை கையும் களவுமாகப் பிடித்தார்கள்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அடையாறு காவல்துறை துணை ஆணையாளர் “ இன்று அதிகாலை 2 அளவில் அவசர உதவி எண் 100 க்கு நீலாங்கரையிலிருந்து ஒரு பெண், 2 திருடர்கள் தனது வீட்டின் முதல் தளத்தில் திருடுவதாகத் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் ரோந்து வாகனங்கள் அங்குச் சென்று திருடியவர்களைப் பிடித்து அசம்பாவிதம் ஏற்படாதவாறு காத்தனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தகவல் தெரிவித்த 3 நிமிடத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் சென்னை காவல்துறையினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இன்று2:00AMஅளவில்100 க்கு நீலாங்கரையில் இருந்து ஒரு பெண்2 திருடர்கள் தனது வீட்டின் முதல் தளத்தில் திருடுவதாக தெரிவித்தார்.இந்த தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் ரோந்து வாகனங்கள் அங்கு சென்று திருடியவர்களை பிடித்துஅசம்பாவிதம் ஏற்படாதவாறு காத்தனர்
— DCP Adyar (@DCP_Adyar) August 11, 2020
Chennai city police,at your service 24x7 pic.twitter.com/BV8IkqEnTW