டிவியில வந்த 'ஒரு' காட்சி...! 'சொந்த மனைவியை 'மீண்டும்' திருமணம் செய்த கணவன்...' - நெஞ்சை உருக செய்யும் காரணம்...!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக ஞாபக மறதி நோயுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு நிமிடம் முன்பு நடந்த சம்பவங்கள் கூட மறந்து போகும் அளவு உள்ளது இவரின் ஞாபக மறதி நோய்.

ஆனால் இவரை ஒரு குழந்தை போல் பார்த்து வருகிறார் அவரின் மனைவி. இந்நிலையில் தன் மனைவியையே மறந்து மீண்டும் அவரையே திருமணமும் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறும் அவரின் மனைவி, 'என்னுடைய கணவருக்கு முந்தைய நிமிடம் என்ன நடந்தது என்பது ஞாபகம் இருக்காது. சில நாட்களுக்கு நாங்கள் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அதில் திருமண காட்சி வந்தது.
உடனே அருகில் இருந்தால் என்னிடம் நாம் அதேபோன்று திருமணம் செய்து கொள்ளலாமா? எனக் கேட்டார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்து என் கணவருடன் மீண்டும் 12 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து கொண்டோம்.' என அவருடைய மனைவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
காலம் கடந்தும் தன் கணவன் மேல் இத்தனை அன்புடன் இருப்பது நெகிழ வைக்கும் விதமாக உள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
