'டெல்டா வைரஸ் பத்தி கவலைப்படாதீங்க'... 'இந்த தடுப்பூசி அடிச்சு தும்சம் பண்ணிடும்'... ரஷ்யா அதிரடி!
முகப்பு > செய்திகள் > உலகம்டெல்டா வைரஸ் இந்தியாவில் முதல் முதலாகக் காணப்பட்டது.
![Sputnik V gives 90 per cent protection against Delta strain Sputnik V gives 90 per cent protection against Delta strain](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/sputnik-v-gives-90-per-cent-protection-against-delta-strain.jpg)
கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் இரண்டாம் அலையின் தாக்கம் உலக நாடுகள் பலவற்றை பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் முதன்முதலாகக் காணப்பட்ட டெல்டா வைரஸ், இப்போது உலக நாடுகளில் எல்லாம் பரவிவிட்டது. இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமே இன்னும் பல நாடுகளை விட்டு வைக்காத நிலையில் டெல்டா வைரஸ் குறித்த அச்சம் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பை ஸ்புட்னிக்-வி போன்ற ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் கொண்டுள்ளன என்று ரஷ்யாவின் நோவாசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழகத்தின் ஆய்வக தலைவரும், ரஷ்ய அறிவியல்கள் அகாடமியின் உறுப்பினருமான செர்ஜி நெடேசோவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து வருகிற தரவுகள், டெல்டா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-வி போன்ற மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்பூசிகள் 90 சதவீத பாதுகாப்பு இருப்பதைக் காட்டுகின்றன. ஏற்கனவே உருவாக்கிய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.
டெல்டா வைரசால் ஏற்படுகிற கொரோனாவின் கடுமையான மற்றும் அபாயகரமான நிகழ்வுகளுக்கு எதிராகக் கிட்டத்தட்ட 100 சதவீத பாதுகாப்பை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி உறுதி செய்கிறது, என ரஷ்யா தெரிவித்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)