கும்பலா சேந்து வாலிபர அடிச்சு... 'சிறுநீர்' குடிக்க வெச்சிருக்காங்க... வெடித்த 'சர்ச்சை'... அதிர வைத்த பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் அமைந்துள்ள பேவ் பலாடி என்னும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த தனது மாமா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த இளைஞருக்கு அருகிலுள்ள திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தை சேர்ந்த சிலருக்கு இளைஞர் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
![Youth thrashed to drink urine in Rajasthan and people arrested Youth thrashed to drink urine in Rajasthan and people arrested](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/youth-thrashed-to-drink-urine-in-rajasthan-and-people-arrested.jpg)
இந்நிலையில், மாமா வீட்டிற்கு சென்று தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த அந்த இளைஞரை கடத்திய அந்த கிராமத்தினர் சிலர், இளைஞரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து அந்த கும்பல் சமூக வலைத்தளங்களில் வெளியிட, அந்த மாநிலம் முழுவதும் இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அம்மாநில முதல்வரின் கவனத்திற்கு இந்த பிரச்சனை செல்ல உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததுடன் இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)