கள்ளக்காதலி கூட இருக்குறப்போ 'டக்'குனு என்ட்ரி ஆன கணவன்...! 'பயத்தில் 5-வது மாடிக்கு ஓடிய வாலிபர்...' - அங்கு கணவன்-மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகள்ளக்காதலியுடன் இருக்கும் போது அவரின் கணவர் வீட்டுக்குள் நுழைந்ததால் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர காண்ட் மாநிலம் நைனிடால் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இரண்டு வருடங்களுக்குமுன் தன் வீட்டாருக்கும் கணவருக்கும் தெரியாமல் வீட்டை வீட்டு ஓடியுள்ளார். இவரின் இந்த முடிவுக்கு உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹ்சின் என்பவரும் துணையாக இருந்துள்ளார். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகி குழந்தையும் உண்டு.
வீட்டுக்கு தெரியாமல் ஓடிய இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்று தனித்தனியாக இருவரும் வெவ்வேறு வீடுகளில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணுடன் மோஹ்சின் தனது நட்பை வளர்த்து கொண்டுள்ளார். அதோடு, கடந்த பல மாதங்களாக மோஹ்சினும் அந்த பெண்ணும் ஒரே வீட்டில் தங்கி நாட்களை கழித்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி சென்ற மனைவியை தேடி அலைந்த அப்பெண்ணின் கணவர் ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூரில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போது அங்கு மோஹ்சினுடன் பெண் இருந்துள்ளார்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால் மோஹ்சின் அந்த பெண்ணின் கணவரை பார்த்ததும், பயத்தில் வீட்டின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அங்கு சென்று பார்த்த கணவன் மற்றும் மனைவி அதிர்ச்சியடைந்தனர். கீழே விழுந்து மோஹ்சின் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மோஹ்சின் உடல் பரிசோதனைக்குப்பின் அவரது உறவினரிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர்.ஆனால் மனைவியை தேடி அலைந்த கணவரும், மோஹ்சினின் காதலியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.

மற்ற செய்திகள்
