ஏடிஎம் மெஷின்ல 'லெட்டர்' எழுதி ஒட்டிய கஸ்டமர்.. மனுஷன் நொந்து போய் எழுதியிருக்காரு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென்காசி: வங்கியின் டெபாசிட் செய்யும் மெஷின் அடிக்கடி பழுதடைவதால் வாடிக்கையாளர் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

பொதுவாக நிறைய ஏடிஎம் மையங்களில் இருக்கும் மெஷின்கள் சரியாக வேலை செய்வதில்லை. அவசரத்திற்கு பணம் எடுப்பதற்கு மக்கள் சென்றால் மெஷின் ரிப்பயர் என்றோ, பணம் இல்லை என்றோ சொல்லி விடும். இதனால் மற்ற ஏடிஎம்-களுக்கு சென்று விடுவர். நகர்ப்புறங்களில் ஆங்காங்கே ஏடிஎம் இருந்தாலும் கிராமப் புறங்களில் அருகாமையில் இருப்பதில்லை. எனவே ஒரு ஏடிஎம்-ல் பணம் இல்லை என்ற சூழலில் அதிக தொலைவிற்கு சென்று பணம் எடுக்கும் சூழலுக்கு தள்ளிவிடுகிறது.
பல மணி நேரம் வரிசையில் நிற்கும் பொதுமக்கள்:
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தபால் நிலையம் அருகே தேசியமய மாக்கப்பட்ட வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அவ்வங்கியில் 24 மணி நேரமும் செயல்படும் ஏ.டி.எம்., பாஸ்புக் அச்சிடும் எந்திரம் மற்றும் பணம் செலுத்தும் எந்திரம் போன்ற வசதிகளும் உள்ளன. ஆனால் இந்த பணம் செலுத்தும் எந்திரம் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் செயல்படாமலேயே இருக்கிறது. இதன் காரணமாக குறைந்த தொகை செலுத்த வருவோர் கூட பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டியது வரும்.
பணம் செலுத்த இயலாது என வந்த அறிவிப்பு:
அதுமட்டுமில்லாமல் இந்த எந்திரத்திலும் பணம் செலுத்தும் முன் கேட்கும் விவரங்கள் அனைத்தையும் பதிவிட்ட பின்னரே பணம் செலுத்த இயலாது என எந்திரம் வெளியிடுகிறது. எந்திரம் பழுதடைவது குறித்த எந்த அறிவிப்பும் வங்கி சார்பில் ஒட்டப்படுவது இல்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வங்கி சேவை குறைபாட்டில் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்களில் ஒருவர் செய்த செயல் வங்கி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க வளமுடன்:
அவர் ஏ.டி.எம். எந்திரம் மீது ஒரு பேப்பரில், 'இனி பணம் செலுத்த வேண்டும் என்றால் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாவூர்சத்திரம் வங்கிக்கு சென்று பணம் செலுத்தவும். இந்த எந்திரம் நேற்று போல் இன்றும் தொடர் கதையாக இயங்காது. இப்படிக்கு ஆலங்குளம் கிளை வாடிக்கையாளர், வாழ்க வளமுடன்' என எழுதி வைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
9 மாதத்தில் இத்தனை ரயில்கள் ரத்தா? ஆர்டிஐ தகவல்... ரயில்வே அமைச்சகம் சொன்ன பதில்!

மற்ற செய்திகள்
