'எங்கயோ போய்ட்டீங்க சார்'... 'பயணிகளின் டென்ஷனை புரிந்துகொண்ட'.. பைலட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Jun 25, 2019 12:30 PM

எப்போதுமே விளையாட்டுப் போட்டிகளின் சில ஆட்டங்கள், சீட்டின் நுனியில் நம்மை உட்காரவைத்து த்ரில்லானதொரு அனுபவத்தைத் தரவல்லவை.

fans requested Pilot to wait till the match ends - WC2019

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, அப்படி ஒரு த்ரில்லான அனுபவத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே தந்த ஒரு மேட்ச் என்றால், அது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையே நடந்த உலகக் கோப்பை போட்டியைச் சொல்லலாம். கடந்த சனிக்கிழமை இந்த 2 அணிகளுக்கும் இடையே நடந்த பொட்டியில் நியூசிலாந்து அணிக்கு இன்னும் ஒரு விக்கெட்டே தேவை என்கிற நிலையில், பிராத்வொய்ட் களத்தில் இருந்தார். மீதமிருந்த 12 பந்துகளை எதிர்கொள்ளத் தொடங்கினார். இறுதியில் இன்னும் 6 ரன்கள் தேவை என்கிற நிலை உருவானது.

இப்படி பரபரப்பாக களம் இருந்தது ஒருபுற என்றால், நியூஸிலாந்தில் இருந்து ஏர் நியூஸிலாந்து விமானம் புறப்படத் தயாராகியதோடு, ரன்வேயை அடைந்தது. அனைத்துப் பயணிகளுமே வந்தடைந்தனர். ஆனால் பரபரப்பான இந்த ஆட்டத்தின் த்ரில்லிங் அனுபவம் அனைத்து பயணிகளையுமே, அதன் முடிவுக்காக காத்திருக்க முடியாது என்ற மனநிலையை உண்டாக்கியது. விமானம் புறப்பட்டுவிட்டால், போன் எல்லாம் பிளைட் மோடுக்கு போய்விடும். ரிசல்ட்டை தெரிந்துகொள்ள பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

உடனே விமானியிடம் கடைசி ஓவரைப் பார்த்து முடிவை அறிந்துகொண்ட பின், விமானத்தை இயக்க வேண்டுமென அனைத்து பயணிகளும் கேட்க, அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒருவழியாக பிராத்வொய்ட் 49-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவ்வளவுதான், மேற்கிந்தியத் தீவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் உறைந்து போயினர். எனினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விமானி காத்திருந்துள்ள சம்பவம் வைரலாகியுள்ளது.