VIBE ஆன ரியல் மலர் டீச்சர்.. .. மாணவர்களுக்கே டஃப் கொடுத்த டான்ஸ்..!. வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து ஆசிரியை ஒருவர் நடனமாடியது தொடர்பான வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "சீனா பொண்ணு, மலேசியா பையன்".. காதல் நடுவே மலர்ந்த தமிழ் மொழி.. "ஜோடியா பேசுறத பாக்கணுமே"!!
பொதுவாக, ஆசிரியர், ஆசிரியைகள் என்றாலே இப்படி தான் இருப்பார்கள் என்ற ஒரு இமேஜ் உண்டு. ஆனால், அவற்றை எல்லாம் உடைக்கும் வகையில் மிகவும் உற்சாகமாக மாணவர்களுடன் இணைந்து மானவர்கள் போலவே மாறி உள்ளார் ஒரு ஆசிரியை. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்து வருவதுடன் ஏராளமான லைக்குகளையும் அள்ளி வருகிறது.
இது தொடர்பாக வைரல் ஆகி வரும் வீடியோவில், கல்லூரி ஒன்றில் ஏதோ நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதாக தெரிகிறது. அந்த சமயத்தில் மாணவ, மாணவிகள் மேடையைச் சுற்றி பாட்டு போட்டு கொண்டு நடனமாடியபடி இருக்கின்றனர். அந்த கூட்டத்தில் இருந்து ஒரு மாணவர், அருகே நிற்கும் சில ஆசிரியர்களை நோக்கியும் செல்வதாக தெரிகிறது. அதில் ஒரு ஆசிரியையை மெல்ல அழைத்துக் கொண்டு நேராக மேடையை நோக்கியும் அந்த மாணவர் வருகிறார்.
ஆரம்பத்தில் அந்த ஆசிரியை சற்று தயக்கத்துடன் மேடையில் நின்றாலும் மாணவர்கள் ஆட்டத்திற்கு ஏற்ப அந்த Vibe -ஐ உணர்ந்து அவரும் வேற லெவலில் நடனமாட ஆரம்பிக்கிறார். ஒரு சில வினாடிகளில் அந்த மேடமும் வேற லெவல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்ட அனைத்து மாணவர்களும் உற்சாகத்துடன் ஆசிரியையுடன் இணைந்து நடனம் ஆடவும் செய்கின்றனர்.
ஒரு பக்கம் ஆசிரிய, ஆசிரியைகள் என்றால் கண்டிப்பு என்ற ஒரு கருத்து இருக்கும் சூழலில், அதையும் தாண்டி மாணவர்களுடன் இணைந்து அவர்களைப் போலவே மாறி Tough கொடுத்து ஆடிய ஆசிரியை குறித்த செய்தியும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
