"நல்லா தான் ஆடிட்டு இருந்தாரு, திடீர்ன்னு".. ஒரே நொடியில் நடந்த துயரம்.. அதிர்ச்சி சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Oct 19, 2022 02:14 PM

நபர் ஒருவர் நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு நேர்ந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

gujarat man passed away while dancing dandiya raas

Also Read | GP Muthu: "நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க".. GP முத்துவின் பேச்சை கேட்டு கலகலத்துப்போன போட்டியாளர்கள்..!

குஜராத்தில் பல பாரம்பரிய நடனங்கள் உள்ளது. அதில் மிக பிரபலமான ஒன்றாக இருப்பது தாண்டியா ராஸ். நவராத்திரி, தசரா உள்ளிட்ட பண்டிகைகளின் போது தாண்டியா ஆட்டம் ஆடுவதை மக்கள் வழக்கமாக கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்படி ஒரு சூழ்நிலையில், தாண்டியா ராஸ் ஆடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயக்கம் போட்ட நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

gujarat man passed away while dancing dandiya raas

குஜராத் மாநிலம், தாஹோட் மாவட்டத்தில் அமைந்துள்ள தேவ்காத் பரியா என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விழா ஒன்று நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது, அங்கே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் கூடி இருந்தனர். அந்த சமயத்தில், சுமார் 51 வயது நபர் ஒருவர், தனது உறவினருடன் சேர்ந்து தாண்டியா நடனம் ஆடிக் கொண்டிருந்துள்ளார்.

ஆரம்பத்தில் மிகவும் வேகமாக அந்த நபர் ஆடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சோர்வடைந்து கீழே அமர்வது போல தெரிந்தது. மறுநொடியே மீண்டும் அவர் எழுந்த நிலையில், நிற்க முடியாமல் உடல் தளர்ந்து அப்படியே கீழே மயங்கி விழுந்து விடுகிறார். இதனைக் கண்டதும் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் பதறிப் போயினர்.

gujarat man passed away while dancing dandiya raas

உடனடியாக அங்கிருந்து அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தகவல்களின் அடிப்படையில் தெரிய வருகிறது. அந்த நபர் கடைசியாக நடனமாடி கீழே மயங்கி விழுவது தொடர்பான் வீடியோக்கள், இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.

சமீபத்தில் கூட, உத்திர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்த நபர் ஒருவர், மேடையிலேயே உயிரிழந்த சம்பவமும் பெரிய அளவில் சோகத்தை உருவாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கும் முன்பாக, ராஜஸ்தான் மாநிலத்தில் கர்பா நடனம் ஆடும் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பலரையும் கலங்க செய்திருந்தும் குறிப்பிடத்தக்கது.

Also Read | 26 வயசுல மினிஸ்டர் பதவி.. உலகமே இவங்கள பத்திதான் பேசிட்டு இருக்கு.. யாருப்பா இவங்க..?

Tags : #GUJARAT #MAN #DANCE #DANDIYA RAAS #DANCING DANDIYA RAAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat man passed away while dancing dandiya raas | India News.