"லீவ் மட்டும் விடுங்க.. உங்களுக்கு கோவில் கட்டுறேன்".. மாணவர்கள் வச்ச கோரிக்கை .. வைரலாகும் கலெக்டரின் பதிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழை காரணமாக விடுமுறை விடக்கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு சோசியல் மீடியா வாயிலாக மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்திருக்கின்றனர். இந்நிலையில், மெசேஜின் ஸ்க்ரீன்ஷாட்களை கலெக்டர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
மழை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. ஏற்கனவே இந்த வருடம் வட கிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருச்சி என தமிழகம் முழுவதும் பரவலாக மழை சமீப நாட்களில் வலுத்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 10 ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு.
காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை விடப்பட்டது. இதனிடையே திங்கட்கிழமை விடுமுறை வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை முதலே மாவட்ட ஆட்சித் தலைவரான கவிதா ராமு அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலமாக கோரிக்கை வைக்க துவங்கியிருக்கின்றனர்.
கோரிக்கை
இந்நிலையில், விடுமுறை விடும்படி மாணவர்கள் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்ந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். அதில் ஒரு மாணவர்,"நாளைக்கு ஒருநாள் மட்டும் லீவ் விடுங்க மேம். உங்களைத்தான் நம்பி இருக்கேன். நான் மட்டுமில்ல எல்லோரும் இதைத்தான் எதிர்பாக்குறாங்க. ப்ளீஸ் மேம்" என கேட்டிருக்கிறார். இன்னொரு மாணவர்,"நாளைக்கு லீவ் இல்லைன்னா பைத்தியம் ஆகிடுவேன் போல, லீவ் மட்டும் விடுங்க மேம் உங்களுக்கு கோவில் காட்டுறேன் என் மனசுல" என உருக்கமாகவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும், ஒரு மாணவர் தான் கல்லூரியில் படிப்பதாகவும் விடுதிக்கு செல்ல முடியாத அளவு மழை பெய்து வருவதாகவும் அதனால் விடுமுறை விடும்படியும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்த மெசேஜ்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பேஸ்புக் பக்கத்தில் கலெக்டர் வெளியிட, இப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.
Also Read | கோவிலில் சாமிக்கு நடந்த தீபாராதனை.. முட்டிபோட்டு வணங்கிய ஆடு.. ட்ரெண்டாகும் வீடியோ..!